ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் முதுகு ரொம்ப வலிக்குதா? இத முதல்ல படிங்க..!


சில பல காரணங்களுக்காக உங்களது உடலை சரியான ஒரு வடிவமைப்பில் பேண வேண்டியது மிகவும் அவசியமாகிறது, இந்த கட்டுரை உங்கள் உடலை சிறப்பாக பேண உங்களுக்கு நிச்சயமாக உதவும் என நம்புகிறோம்.

ஏன் நீங்கள் உங்கள் உடலை மிகவும் அழகாக பேண வேண்டும் இதோ அதற்கான சில காரணங்களை நாங்கள் தருகிறோம்

1. ஒழுங்கற்ற உடலமைப்பு முதுகு வலியையும் நெஞ்சு பகுதிகளில் அதிக சதை சேர்தல் இரத்த ஓட்டத்திற்கு தடையையும் உண்டாக்க கூடும்.

2. ஒழுங்கான உடலமைப்பு உங்களுக்கு இருக்குமாயின் முதுகு, கழுத்து,தோள்பட்டை போன்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

3. ஒழுங்கான உடலமைப்பு கொண்ட ஒரு நபருக்கு சுவாசம், சமிபாடு, ஹோர்மோன் சமநிலை, வேலைப்பழு போன்றவற்றை மேற்கொள்ளுதல் தொடர்பில் சிக்கல் தன்மைகள் காணப்படாது .

ஒழுங்கான உடலமைப்பு அற்றவரா நீங்கள் கவலையை விடுங்கள் சரியான உடல்பயிற்சிகள் மூலம் அதனை சரி செய்து விடலாம்.

அத்துடன் உங்கள் உடல் தசைகள் வலுப்பெறவும் இந்த உடல் பயிற்சிகள் உங்களுக்கு சிறப்பாக உதவ கூடும்.

அதனை விட உங்கள் தசைகள் குறித்து அதிக கவனம் செலுத்த விரும்பினால் யோகாவில் ஒரு ஆசனமான ஷலாப்ஹாசனா என்ற நிலை மூலம் அதை பெற முடியும்.

• அறிவுறுத்தல்கள்

முதலில் குப்புற படுத்து உங்கள் உடல் முழுவதும் தரையில் படுமாறு படுத்து கொள்ளவும் பின்னர் கால்களை கொஞ்சம் விரித்து பெருவிரல்கள் இரண்டும் தரையில் படுமாறு இருக்கவும்.

அடுத்து உங்கள் முகத்தை நேரே நிமிர்த்தி முன்னாள் உள்ளதை பார்க்க கூடியவாறு தலையை நிமிர்த்தி கொள்ளவும்.

அதன் பின்பு உள்ளங்கைகள் தரையை பார்க்குமாறு வைத்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நன்றாக உயர்த்தி கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கால்களை நோக்கி செல்லுங்கள் தொடை தசைகளின் உதவியுடன் உங்கள் இரண்டு கால்களையும் மடக்காமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மேலே உயரத்தி கொள்ளவும்.அவ்வாறு செய்த பின் அதே நிலையில் தொடர்ந்து 10-60 செகண்ட்கள் இருக்கவும் பின்னர் 5-10 தடவைகள் இவ்வாறு செய்யவும்.

உங்கள் முதுகு வலிக்கும் அதே நேரம் உங்கள் கால்களுக்கும் சரியான பயிற்சியை இந்த உடல் பயிற்சியின் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.

அவ்வாறே உங்கள் உடலின் சரியான வடிவமைப்பிற்கும் இந்த பயிற்சி உங்களுக்கு உதவும், முக்கியமான குறிப்பு நீங்கள் முதுகுவலியால் அவதி படுபவராயின் இந்த பயிற்சியை எடுக்கும் முன்னர் உங்கள் வைத்தியரை ஆலோசிப்பது சிறப்பானது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!