நீண்ட காலம் உயிர் வாழ ஆசையா..? மறக்காம தினமும் 2 முட்டை சாப்பிடுங்க..!


முட்டை நிறையுணவு என்பது அனைவரும் அறிந்ததே.

தினமும் ஒரு முட்டையும்,ஒரு கப் பாலும் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என நம் தாய்மார்கள் எமக்கு கூறியுள்ளனர்.

ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் சாப்பிட்டால் அவை எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கின்றன என நம்பி வந்தோம்.

ஆனால் இன்று பல ஆய்வாளர்களின் கருத்துப்படி தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற பல் நன்மைகளை பெற முடிகின்றது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

இரண்டு முட்டைகளின் நன்மைகள்

(1) புற்று நோய்க்குரிய ஆபத்தைக் குறைக்கின்றது

முட்டையில் உள்ள விட்டமின்,கனியுப்பு,அமினோ அமிலங்கள் estrogen அளவை கட்டுப் படுத்துவதனால் மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.


இரண்டு முட்டைகள் சாப்பிட்டு வந்தால் 18% வரை மார்பகப் புற்றுநோயினை தடுக்க முடியும்.

(2) இதய நோய்களைத் தடுத்தல்

முட்டைகள் அதிகமாக சாப்பிடுவதனால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என நம்பி வருகின்றோம்.

உண்மையில் முட்டையில் 40% நல்ல கொழுப்புக்களே உள்ளன.

இவை உடலில் கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றது.

தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடுவதனால் உடல் எடை குறைவதுடன் கெட்ட கொழுப்புக்களை குறைத்து இதய நோய்களில் இருந்து பாதுகாக்கின்றது.


(3) கண்பார்வை அதிகரித்தல்

கண் பார்வைக்குத் தேவையான விட்டமின் ஏ முட்டையில் அதிகளவு உள்ளது.மேலும் இதில் உள்ள lutein,xanthine எனும் ஆண்டிஒக்ஸிடண்ட் கண் உறுப்பு பாதிப்படைவதை தடுக்கின்றது.

(4) மூளையப் பாதுகாத்தல்

கோலின் (choline) எனப்படுவது மூளைக்கு தேவையான அத்தியவசியமான ஊட்டச்சத்து. இவை நரம்புகளை தூண்டி மூளையை சிறப்பாக செயற்பட வைக்கிறது. முட்டையில் அதிகளவான கோலின் இருப்பதால் இவை மூளையை தொழிற்படச் செய்ய உதவுகின்றது.

(5) வயதடைவதை தடுக்கும்

முட்டையில் உள்ள கரோட்டின் சருமம் வயதடைவதை தடுப்பதுடன்,சருமத்தில் ஏற்படும்.

புற்றுநோய்களையும் வராமல் தடுக்கின்றது.ஆனால் முட்டையை அவித்து உண்ணும் போது மட்டுமே அதிகளவு கரோட்டின் நம் உடலில் சென்றடைகின்றது.


(6) குழந்தையின்மை பிரச்சினைய குறைக்கும்

பெண்களின் கர்ப்பத்திற்கு முக்கியமானது விட்டமின் பி9 அதாவது போலிக் அமிலம்(follicacid). இவை கருமுட்டையை பாதிப்படையாமல் பாதுகாக்கும் திறன் கொண்டுள்ளது.

பெண்கள் அதிகளவு முட்டையை எடுத்து வந்தால்அதில் உள்ள போலிக் அமிலம் அவர்களது கர்ப்பகாலத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

(7) ஈரல்,சருமம்,தோலின் ஆரோக்கியத்தை பேணுதல்

முட்டையின் மஞ்சள் கருவில் செறிந்துள்ள சல்பர்(suphar)முடி மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரித்து பாதுகாக்கின்றது.மேலும் இதில் உள்ள லெசித்தின் ஈரல் நச்சுத் தன்மை அடையாமல் பாதுகாக்க உதவுகின்றது.

(8) எடையைக் குறைக்க உதவுகின்றது

முட்டையில் மாப்பொருட்களின் அளவு குறைவாக இருப்பதனால் தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவதால் உடல் எடையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை.

(9) எலும்புகளை வலிமையாக்குகின்றது

விட்டமின் டி,கல்சியம் அதிகம் காணப்படுவதனால் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமைப் படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

எண்ணற்ற பல நன்மைகள் முட்டையில் இருப்பதனால் தினமும் இரண்டு முட்டைகள் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!