குடலின் கழிவுகளை நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள இத தினமும் சாப்பிடுங்க…!


குடலின் சிறந்த தொழிற்பாட்டினால் உடலின் ஆரோக்கியம் பேணப்படுகின்றது. சமிபாடு அடையாத உணவுகள் குடலில் சேர்வதனால் குடல் நச்சுத் தன்மை அடைகின்றது.

இதனால் உடலும் நச்சுத் தன்மை அடைதல், எடை அதிகரித்தல், சக்தி குறைதல், சோம்பல், தலை வலி போன்றன ஏற்படுகின்றது.

பழங்கள் மற்றும் காய் வகைகளில் தயாரிக்கும் இந்த உணவு வகை குடலின் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதுடன் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றது.

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள கரையும் நார்ப் பொருட்கள் குடலில் உள்ள கழிவுகளை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகின்றது. இதனால் மலச்சிக்கலை தடுக்க முடியும்.

சியா விதைகள்
சியா விதைகளில் உள்ள அதிகளவான நார்ப் பொருட்கள் சமிபாட்டுத் தொகுதியின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன் உடல் விட்டமின், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகின்றது.

சியா விதைகள் எடையைக் குறைப்பதற்கு உதவுவதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதயத் துடிப்பை வலிமைப்படுத்துகின்றது.


ஆளி விதைகள்

நார்ப் பொருட்கள் நிறைந்த ஆளி விதை சிறு குடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரித்து, குடல் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.

குடலைச் சுத்திகரிக்கும் ஆப்பிள் உணவு

தேவையான சேர்மானங்கள்

•ஆப்பிள் -1

•சீயா விதை – 1 மேசைக்கரண்டி

•ஆளி விதை – 1 மேசைக்கரண்டி

•நீர் – 1 கோப்பை

•தேன் – 1 தேக்கரண்டி


செய்முறை

சீயா விதைகளைத் தவிர்த்து அனைத்து சேர்மானங்களையும் நன்றாக அரைத்து ஒரு கோப்பையில் எடுத்துக் கொள்ளவும்.

அதில் சீயா விதைகளைப் போட்டு 5 நிமிடங்கள் வரை கலக்கவும்.

சுவையான குடலைச் சுத்திகரிக்கும் ஆப்பிள் பானத்தை குடிக்கும் போது அதிகளவான நீரையும் அருந்துதல் முக்கியமானது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!