சிறுநீரகத்தில் அழற்சியா..? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் போதும்…!


பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆளி விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றால், . அவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய உணவுகளில் ஒன்று `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ அதாவது ஆளி விதை பவுடர். இந்த பவுடர் எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

இந்த ஆளி விதையை அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகலாம். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும்.

ஆளி விதையின் பலன்களை இப்போது பார்க்கலாம்.

ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.


மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால், சுழற்சி மாற்றங்களை தடுப்பதுடன், கருப்பை செயலிழப்பு ஏற்படுவதும் குறையும்.

நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,
சருமம், நரம்புகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி, மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்து, நம் உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும்.

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

நம் உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடி, இதய நோய்கள், ஆஸ்துமா, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அழற்சி நோய்களான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், சொரியாசிஸ் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

கண் கோளாறுகள், சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சி போன்ற பிரச்சனைகளை குணமாக்க, ஆளி விதையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தாலே போதும்.

ஆளி விதையில் தயாரிக்கப்படும் எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்யும்.


ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, நம் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமலும் தடுக்கவும் ஆளி விதை உதவுகிறது.

ஆளி விதையின் பக்கவிளைவுகள்…

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை உட்கொள்ளும் நாள்களில் அதிக அளவில் நீர் பருகவில்லை என்றால் மலச்சிக்கல் , வாய்வு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலங்களின் ஆரம்பகட்டத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சியை பாதிக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!