இரவில் தூங்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைப்பதால் இவ்வளவு நன்மையா..?


எலுமிச்சம்பழம் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்றாகும். இந்த எலுமிச்சம்பழத்தில் மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளதோடு சுவையும் நிரம்பிக் காணப்படுகின்றது.

எம்மவர்கள் இந்த எலுமிச்சம்பழத்தை சமையலுக்கு பயன்படுத்துவதைப் போலவே இந்துக்கள்பு னிதமான ஒன்றாகவும் கருதுகின்றனர். இவ்வாறிருக்க, எலுமிச்சம்பழத்தை வேறு எந்த தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்பதையும் நாம் இப்போது நோக்குவோம்.


01. எலுமிச்சம்பழத்தின் நறுமணம், மூளையில் உற்பத்தி செய்யப்படும் செரடோனின் ஹோர்மோன் உற்பத்தியை அதிகரித்து மனநிலையை சந்தோஷமாக வைத்திருக்க உதவி புரிகின்றது.

02. இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளி வரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மனஅழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.


03. காற்றில் உள்ள அசுத்தம் மற்றும் பக்டீரியாக்களை உறிஞ்சி சுத்தமான காற்றை சுவாசிக்க வழி கோலுகின்றது.

04. சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால் மூக்கடைப்பு நீங்கி சுவாசிக்கும் திறன் மேம்படும்.

05. எலுமிச்சையில் இருந்து வெளி வரும் நறுமணம் நமது உடம்பில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.


06. எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!