ஆண்கள் வயதுக்கேற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறுவது ஏன் தெரியுமா..?


முன்பு போலல்லாது இன்றைய காலத்து இளைஞர்கள் வேலைப்பழு காரணமாக உடற்பயிற்சி செய்வதை முற்றாக மறந்து விடுகின்றனர். அதையும் மீறி நேரம் கிடைத்தாலும் அவர்கள் உடற்பயிற்சி செய்வதில் அக்கறை செலுத்துவதில்லை.

இந்த இயந்திர வாழ்க்கைக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். அதனால் போதியளவு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

எனினும், ஆண்கள் என எடுத்துக் கொள்ளும் போது, அவர்கள் வயதுக்கேற்றபடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போதும், நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.

அந்த வகையில், ஒவ்வொரு வயதெல்லைக்குட்பட்ட ஆண்கள் எவ்வாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


01. 15 வயது
15 வயது தொடக்கத்தில் ஓரு சிறுவன் ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹோர்மோன்களின் செயற்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளுதூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்துக்கொள்ளும்.

02. 20 வயது முதல் 30 வயது
20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை விருத்தி செய்வது சிறந்தது.

03. 30 வயது முதல் 40 வயது
30 வயது முதல் 40 வயது வரையான காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவும் குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் எச்.ஐ.ஐ.டீ உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.


04. 40 வயது முதல் 50 வயது
40 வயதின் தொடக்கத்தில் மற்றும் 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக் கூடாது. தினமும் சிறிது பளுத்தூக்கும் பயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றை மேற் கொள்ள வேண்டும்.

05. 50 தொடக்கம் 60 வயது
50 வயதுக்கு மேல் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும்அ ற்புதமான ஓர் உடற்பயிற்சியே.

06. 60 வயது தொடக்கம்
60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவேஇந்தவயதில்உடற்பயிற்சிசெய்வதைநிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடைப்பயிற்சியை செய்து வரலாம். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!