குதி கால்களில் பித்த வெடிப்பா..? இயற்கையாக குணமாக்க இதோ சில வீட்டு குறிப்புக்கள்..!


நாம் ஒவ்வொரு வரும் எமது பாதங்களை பூ போல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் இந்த பாதங்களில் வெடிப்பு ஏற்படுமாயின் அது அழகைக் கெடுப்பதோடு ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

பாதணிகள் அணியாது வெளியில் செல்வதால் இந்த வெடிப்பு ஏற்படுகிறது என பலர் கூறுவார்கள். எப்படியிருப்பினும் இந்த வெடிப்புக்களை சரி செய்து கொள்வதென்பது பணத்தையும் அதிகளவில் செலவழிக்க வைக்கும்.

ஆனால் பணத்தை செலவழிக்காமல் வீட்டிலிருந்தே வெடிப்பை எப்படி சீர் செய்வது எனப் பார்ப்போம்!


01. வேப்பிலையை அரைத்து அதனுடன் பயித்தம் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சைசாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி, வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

02. கால் பக்கெற்று வெதுவெதுப்பான நீரில் 2 கோப்பை அப்பிள் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழ்த்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையைஅகற்றிமென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்.


03. தேவையான பொருட்கள்
தேன் – 1 கோப்பை
பால் – 1 தேக்கரண்டி
ஒரேஞ்ச்சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை
தேனை இலேசாக சூடு படுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஒரேஞ்ச் சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஒரேஞ்ச்சாறை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!