கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்புக்கு தீர்வு சொல்லும் வெட்டிவேர்..!


வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். இது புல் இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வெட்டி வேரின் பயன்களை குறித்து தற்போது பார்க்கலாம்.

வெட்டிவேர் உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை.

தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்.

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது. காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.


வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது. பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுகள் வளச்சியை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கிறது.

வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது. வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் புதிய திசுக்கள் வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது.

வெட்டிவேர் டானிக் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம், நோயெதிர்ப்பு, நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது. இந்த டானிக் உடலை சீர்படுத்தி, புத்துணர்ச்சி அடைய செய்கிறது. உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இது தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன் அளிக்கிறது. கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!