ஹார்மோன்களை சமநிலைப்படுத்த இந்த எண்ணெய்களால் முடியுமா? இத முதல்ல படிங்க.!


ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உடலில் பல பாதிப்புக்கள் ஏற்படுகிறது. அதாவது சோம்பல், மனநிலை மாற்றங்கள், இனவிருத்தி பிரச்சினை, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், தூக்கமின்மை, போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையினால் நீரிழிவு நோய் மட்டுமல்லாது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகளவில் உள்ளது.

ஏழு முக்கிய எண்ணெய்களால் ஹார்மோன்களை சமநிலையாக பேண முடியும்.

1. லாவண்டர் எண்ணெய்.
லாவண்டர் எண்ணெய் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுவதுடன், பெண்களின் மாதவிடாய் காலங்களில் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்புக்களை குணப்படுத்துவதற்கு உதவும். அத்துடன் அவர்களின் மன அழுத்தத்தையும், அசௌகரியங்களையும் குணப்படுத்த வல்லது.

2. தைம் எண்ணெய்.
தைம் எண்ணெய் progesterone ஹார்மோன்களின் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், மன அழுத்தத்தையும், இன விருத்தி பிரச்சினையும் குறைக்கிறது.


3. துளசி எண்ணெய்.
துளசி எண்ணெய் adrenal சுரப்பியில் cortisol உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் உடல், மன அழுத்தங்களை தூண்டுகிறது.

4. சாகி எண்ணெய்.
சாகி எண்ணெய் (clary sage oil) cortisol அளவைக் குறைப்பதன் மூலம், மன அழுத்தத்திற்கு எதிராக செயற்பட்டு சிறந்த மனநிலையை உருவாக்குவதுடன், தையிரோயிட் ஹார்மோன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.


5. எலுமிச்சைப் புல் எண்ணெய்.
சூலகத்தில் estrogen, progesterone சமநிலையில் இல்லாவிடின் கருத்தரிப்பதிலும், மாதவிடாய் ஏற்படுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் எலுமிச்சைப் புல் எண்ணெய் ஈரலின் செயற்பாட்டை அதிகரித்து, அதன் மூலம் ஈரல் கொழுப்பைக் குறைத்து, ஹார்மோன்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.

6. சந்தணமர எண்ணெய்.
இந்த எண்ணெய் ஆண்கள் மற்றும் பெண்களில் testosterone அளவை சமநிலைப் படுத்துவதனால் இயற்கையாகவே பாலுணர்வைத் தூண்டும்


7. மிருது எண்ணெய்.(myrtle oil)
தையிரோயிட் உடலின் வெப்பநிலையைப் பேணுதல், மெட்டபோலிசத்தை அதிகரித்தல் போன்ற பல செயற்பாடுகளை செய்கிறது. இந்த எண்ணெய் பயன்படுத்துவதனால் தையிரோயிட் தொழிற்பாட்டை சீராக பேண முடியும்.

இந்த எண்ணெய்களை பயன்படுத்துவது எப்படி?

• இந்த எண்ணெய்களை தேங்காய் எண்ணெய்களுடன் சேர்த்து, சருமத்தில் தேய்ப்பதனால் உடலால் உறிஞ்சிக் கொள்ள முடியும்.
• ஹார்மோன்களின் சமநிலையை மேம்படுத்துவதற்கு, 2 துளி sage எண்ணெய், 2 துளி லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
குளிக்கும் சூடான நீரில் 2 துளி லாவண்டர், 3 துளி சாகி எண்ணெய்யைக் கலப்பதனால் சிறந்த தீர்வு கிடைக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!