அசைவ உணவுகளை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும்..?


குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் அவதானத்துடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். குழந்தையின் ஆரோக்கியம் முதல் அதன் பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

வெறுமனே தாய்ப்பாலை மாத்திரம் குடித்து வளரும் குழந்தைகளுக்கு எப்போது மாமிசம் போன்றவற்றை வழங்குவதென்பது இப்போதுள்ள பல இளம் தாய்மார்களுக்குத் தெரியாது.
ஒரு குழந்தை பிறந்து அதற்கு ஆறு மாதங்கள் கழிந்த பின்னர், பாலைத் தவிர ஏனைய உணவுகளை வழங்க ஆரம்பிக்கலாம். அசைவ உணவுகளை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும்? எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும்! குழந்தைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமாக வளரும்.


அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை நினைவில் அகாள்ள வேண்டும்.

இப்போது அசைவ உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது தொடர்பில் விரிவாக பார்ப்போம்!

01. முதலாவதாக குழந்தைக்கு முட்டையை வழங்குங்கள். குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிய பின்பே அசைவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

02. முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.


03. அடுத்ததாக கோழி இறைச்சியை கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது.

அசைவ உணவுகளை உண்ணும் போது சில சமயங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் மற்றும் வலி என்பன உண்டாகலாம்.

மேலும் சில குழந்தைகள், வித்தியாசமான சுவைகளை உண்ண மறுப்பார்கள். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுப்பது
சிறந்தது.

இரண்டு வயது பூர்த்தியான பின்பே ஆட்டிறைச்சி கொடுப்பது நல்லது என்பதை நினைவில் இருத்த வேண்டும். ஏனெனில் ஆட்டிறைச்சி சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!