வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்தால் 10 வயச குறைச்சு இளமையா காட்டலாம்!


சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் மஞ்சள் ஒரு சிறந்த நிவாரணி. இதனால்முகத்தை அழகுபடுத்தும் வகையில் மஞ்சளை பயன்படுத்தி பேக் செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 2 தேக்கரண்டி
மஞ்சள் – அரைத் தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பால் – 3 தேக்கரண்டி


செய்முறை
கடலை மாவில் பால், மஞ்சள் மற்றும் பாதாம் எண்ணெய் என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். 30 நிமிடங்களின் பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். |

வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்வதன் மூலம், தேமல், கரும்புள்ளி, முகப்பரு மற்றும் தொற்றுக்கள் என்பன ஏற்படுவது தடுக்கப்படும்.

கவனிக்கவும்:
பக்கெற்றில் விற்கப்படும் மஞ்சளில், சமயலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி கலந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் பசும் மஞ்சள் கிழங்கை வாங்பி அதனை அரைத்துக் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

அத்தோடு வெயிலில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் சருமம் கருமையடையாது பாதுகாக்கப்படும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!