குழந்தைகள் மாதுளம்பழத்தை ஏன் கட்டாயம் உண்ண வேண்டும் என தெரியுமா..?


குழந்தைச் செல்வம் என்பது ஒவ்வொரு பெற்றோரும் பெறும் வரம் என்று தான் கூற வேண்டும். அதிலும், சில பெற்றோருக்கு குழந்தை பிறந்தாலும் அது சில குறைகளுடன் பிறக்கும். மேலும் சிலருக்கு பிறந்த குழந்தை இறந்து விடும்.

அதனால் குழந்தை பிறக்க முதல் இருந்து மட்டுமல்லாது பிறந்த பின்பும் அவர்களது நலன் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் எனும் போது உண்ணும் உணவுகள் மற்றும் சுத்தம் என்பன தொடர்பில் மிகுந்த அக்கறை வேண்டும்.

உணவு என்பதை எடுத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். மேலும் பழ வகைகளையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழவகைகளில் அனைத்துமே குழந்தைகளுக்கு உகந்தது தான். அதிலும் குறிப்பாக மாதுளம்பழத்தை குழந்தைகள் கட்டாயம் உண்ண வேண்டும்.


இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அது சரி, மாதுளையை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

01. பக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் ஒவ்வாமையை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை இந்த மாதுளைக்கு உண்டு. இதனை குழந்தைகள் உட்கொள்ளும் பட்சத்தில், அவர்களது உடல் நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

02. மாதுளைச் சாறு காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள அன்டி-அக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.


03. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளம்பழச் சாற்றை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழிக்கலாம்.

04. குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள அன்டி-வைரஸ் மற்றும் அன்டி-பக்டீரியல் என்பவை தான் காரணம்.

05. மாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே குழந்தைகளுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், இப்பழத்தை உண்பதன் மூலம் அது விரைவில் குணமாகும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!