ஆண்களே அதிகமாக முடி உதிர்கின்றதா..? வீட்டிலே இதை முயற்சி செய்து பாருங்கள்!


மன அழுத்தம் என்பது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரையும் பாதிக்கின்றது. பொதுவாக ஆண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முடி உதிர்வது அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, அதிகமாக முடி உதிர்கின்றதே எனும் எண்ணமும் அவர்களின் மன அழுத்தத்தை மேன்மேலும் கூட்டி விடும். அதனால் முதலில் முடி உதிர்தல் பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு தீர்வு காண்பது எனப் பார்ப்போம்.

காய்கறிகள் உடலுக்கு வலுவூட்டுவன என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சருமம் மற்றும் தலைமுடிக்கும் அவை வலு சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று தான் பீட்ரூட்.


பீட்ரூட்டை வைத்து பேக் தயாரித்துத் தலைக்குப் போட்டு வருவதால் அதிக அளவில் தலைமுடி உதிர்வது தடுக்கப்படும். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள விட்டமின் பீ, விட்டமின் சீ, பொஸ்பரஸ், கல்சியம் மற்றும் புரதம் என்பவை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

பீட்ரூட் பேக் தயாரிக்கும் முறை

மூன்று தேக்கரண்டி அளவு பீட்ரூட்டைத் துருவி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதை தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க விடவும். இதன் பின்னர், தண்ணீரையும் பீட்ரூட்டையும் வடிகட்டித் தனித்தனியே வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய பீட்ரூட்டை நன்கு பேஸ்டாக்கிக் கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்க்கவும்.


20 முதல் 25 நிமிடங்கள் வரை உலரவிட்டு, பின் நல்ல ஷhம்பு ஒன்றை பயன்படுத்தி தலையை கழுவ வேண்டும். வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை காலை நேரத்தில் இவ்வாறு செய்து வர ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணமுடியும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!