ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஏன் வெண்டிக்காய் சாப்பிட வேண்டும்..?


வெண்டிக்காய் என்பது மருத்துவ குணம் நிறைந்த ஒரு மரக்கறி வகையாகும். எனினும் இதன் சுவை மற்றும் வழுவழுப்புத் தன்மையை பலர் விரும்புவதில்லை. இதனால் வெண்டிக்காய்க்கு உள்ள மவுசு சற்று குறைவு தான். ஆனால் இந்த வெண்டிக்காயை உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றது தெரியுமா? அந்த நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

01. அதிகளவு நார்ச்சத்து உண்டு
வெண்டிக்காயில் உள்ள நார்ச்சத்து உணவு சமிபாடடையும் செயற்பாட்டை ஊக்குவிக்கின்றது.

02. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றது
வெண்டிக்காயில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயை தடுக்கின்றது.

03. நரம்பு குழாய் குறைபாட்டை தடுக்கின்றது
இந்த வெண்டிக்காயில் உள்ள போலேட், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு குழாய் குறைபாட்டை தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் கர்பிணித் தாய்மார்கள் இதனை உட்கொள்வது மிகவும் சிறந்தது.


04. இரத்தம் உறைவது தடுக்கப்படும்
வெண்டிக்காயில் உள்ள விட்டமின் கே, இரத்தம் உறைவதை தடுப்பதோடு எலும்புகளை உறுதியாக்குகின்றது.

05. ஆஸ்துமாவை குணமாக்குகின்றது
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெண்டிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஆஸ்துமாவிலிருந்து விடுபட முடியும்.

06. மலச்சிக்கல் நீங்கும்
நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நீரை முறையாக உறிஞ்ச இந்த வெண்டிக்காய் உதவி புரிகின்றது. இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

07. வெயிலால் ஏற்படும் மயக்கம் தடுக்கப்படுகின்றது
வெண்டிக்காயில் உள்ள சத்துக்கள் வெயில் தாக்கத்தால் மயக்கம் ஏற்படுவதை தடுக்கின்றது.


08. பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கின்றது
மனிதனுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் இந்த பெருங்குடலிலேயே தோன்றுகின்றது என சொல்வார்கள். அந்த வகையில் உயிருக்கே ஆபத்தாக முடியும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை இந்த வெண்டிக்காய் தடுக்கின்றது.

09. உடற் பருமனை குறைக்கும்
அளவுக்கு அதிகமாக உடல் பருமனடைவது தடுக்கப்படுகின்றது. அதிகளவான கொழுப்புணவுகளை உட்கொள்ளல் மற்றும் கலோரி கூடிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் மாத்திரமே உடல் பருமன் அடைகின்றது எனக் கொள்ள முடியாது. போதிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காத போதிலும் உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.


10. கொலஸ்ரோல் கட்டுப்படுத்தப்படுகின்றது
வெண்டிக்காயில் உள்ள ஒரு வித சக்தி, மனித உடம்பில் அதிகளவு கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கின்றது. இதன் மூலம், கொலஸ்ரோல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

11. தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது
வெண்டிக்காயில் உள்ள விட்டமின் சீ, தோலை இளமையாக வைத்திருக்க உதவி புரிவதோடு கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஆகியவற்றிலிருந்தும் தோலை பாதுகாக்கின்றது.

12. தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த வெண்டிக்காயில் உள்ள சத்துக்கள் உதவி புரிகின்றன. பொடுகுத் தொல்லையிலிருந்து விடுவிப்பதுடன் பளபளப்பான தலைமுடியைப் பெறவும் உதவி புரிகின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!