ஆண்களே டீ – சர்ட் அணியும் போது இதையெல்லாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் என தெரியுமா..?


இன்றைய நவீன உலகில் டி சர்ட் அணிவது தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் சௌகரியமான உடையாகக் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக, டீ-சர்ட் இப்போது முழுக்க முழுக்க கேசுவல் ஆடையாக மாறிவிட்டது. அதுதான் எல்லோருக்கும் பிடித்தமான ஆடையும் கூட.

ஃபார்மல் பேண்ட், ஜீன்ஸ், சார்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் என எல்லா கீழாடைகளுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். அதோடு, எல்லா காலநிலைகளும் டீ-சர்ட் அணிவதற்கு சௌகரியமானதாக இருக்கும்.

நீங்கள் அணியும் டீ-சர்ட்டுகள் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற பொருத்தமான அளவில் இருத்தல் அவசியம்.

டீ-சர்ட் எல்லா இடங்களுக்கும் ஏற்ற ஆடையல்ல. சரியான இடங்களுக்கு அணிந்து செல்லுதல் வேண்டும். தேவையில்லாத இடங்களுக்கு டி-சர்ட் அணிந்து செல்லக் கூடாது. குறிப்பாக,
திருமணம் போன்றவற்றில் டீ-சர்ட் அணிய முடியாது. அங்கு மரபார்ந்த ஆடைகளை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். எந்த இடத்துக்குப் பொருத்தமாக இருக்குமோ இங்கு தான் அணிந்து செல்ல வேண்டும்.

கோடை காலங்களிலோ சுற்றுலாக்கள் செல்லும் போது, டீ-சர்ட் அணிந்து செல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

உங்களுடைய உடல்வாகு மிக முக்கியம். உடல்வாகை விட சிறியதாகவோ, அளவில் பெரியதாகவோ இருந்தால் அது உங்கள் உடல்வாகின் அழகையே கெடுத்துவிடும்.

வாங்கும் போதே அளவுகளைப் பார்த்து வாங்குங்கள். டி-சர்ட்டுகளைப் பொருத்தவரையில், நீங்கள்ஆல்டர் செய்து அணிவது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.


டி-சர்ட்டின் தோள்பட்டை உங்கள் தோள்பட்டையிலிருந்து சிறிதும் விலகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

அக்குள் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதி மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை வெளியே எடுத்துக் காட்டும்.

கைக்குக்கு கீழே உள்ள பகுதி வட்ட வடிவில் இல்லாமல் v வடிவில் இருப்பது உங்கள் உடலை ஃபிட்டாகக் காட்டும்.

டீ-சர்ட்டின் கை அளவு உங்கள் பெருவிரலும் திசைகாட்டி விரலும் விரிந்த நிலையில் இருப்பது மிகச் சரியான அளவாகும். அதைவிட கொஞ்சம் கீழாக இருந்தாலும் அது உங்களுக்கு ஃபிட்டான அளவு கிடையாது.

அதேபோல் டீ-சர்ட்டின் அளவும் உயரமும் மிக அவசியம். உங்களுக்கு சரியான அளவு எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் இரண்டு கைகளையும் உங்கள் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு நில்லுங்கள். அப்போது நீங்கள் அணிந்திருக்கும் டீ-சர்ட் உங்கள் பேண்ட் பெல்ட்டுக்கு நேராக இருந்தால் அது மிகச் சரியான அளவு. அதற்கும் மேல் உங்கள் வயிற்றுப்பகுதி தெரிந்தால் அது சிறிய அளவு. அதைத் தவிர்த்திடுங்கள்.


அதேபோல பேண்ட் ஜிப்புக்குப் பாதியளவு வரை நீளமாக இருப்பது தான் உயரத்தில் மிகச் சரியான அளவு. தொடை வரை உள்ள டீ-சர்ட்டுகள் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும்.

கழுத்தைப் பொருத்தவரையில் ரவுண்ட் நெக் தான் ஃபிட் அண்ட் ஸ்மார்ட் ஆக இருக்கும். காலர் மற்றும் v வடிவ கழுத்துகள் உள்ள டீ-சர்ட்களைத் தவிர்த்திடுங்கள்.

ப்ளூ, கிரே, ரெட், ஒயிட் ஆகிய வண்ணங்களில் உள்ள டீ-சர்ட்டுகள் குட்டை, உயரம், கருப்பு, வெள்ளை நிற சருமம் உள்ள எல்லோருக்குமே அழகாக இருக்கும்.

டீ-சர்ட் அணியும் போது, கூடவே நல்ல காலணிகள், கண்ணாடி, பெரிய வாட்ச் ஆகியவற்றை அணியலாம்.

அது இன்னும் கிரேட் லுக்கைத் தரும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!