ஒரு சில பெண் குழந்தைகளுக்கு ரத்தக்கசிவு ஏற்படுவது ஏன்..?


பிறந்த ஒரு வாரத்துக்குள் சில பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு காணப்படுகிறது. இதற்கு என்ன காணரம்? இதனால் பின்னால் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா?

தாயின் ரத்தத்தில் ஊறும் சிலவகை “பெண்மை“ ரசாயனங்கள், அவள் கர்ப்பப்பையின் உட்தோல் ரத்த நாளங்களை உதிர்த்து வெளியேற்றி மாதவிலக்கு ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் தாயின் இந்த ரசாயனங்கள் பெண் சிசுவின் உடம்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, குட்டி சிசுவின் கர்ப்பப்பை உட்தோலிலும் ரத்த நாளங்களை உதிர்த்து வெளியேற்றி விடுகின்றன.

இது ஒரு சாதாரண ரசாயன மாற்றம்தான். குழந்தை பிறந்த சில நாள்களுக்குள் இதுபோன்று உதிரப்போக்கு ஏற்பட்டு அத்தோடு நின்றுபோய்விடும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அரிதாகக் கொஞ்சம் அதிகமாக உதிரப்போக்கு நேர்ந்தால் குழந்தை நலமருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!