சமையலறையை அழகாக பராமரிக்க இதோ எளிமையான வழிகள்..!


வீட்டைப் பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. வீட்டு சுத்தம், தோட்டப்பராமரிப்பு, வாஸ்து, கிச்சன் விஷயங்கள் என வீட்டுப் பராமரிப்பில் தலைவலி ஏராளம்.

அதில் நாம் செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்றன. குட்டி குட்டி டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொண்டாலே போதும்.

ஓ இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்று நீங்களே வியக்கும் சில விஷயங்கள் பல உண்டு. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

முதல் நாள் சமைத்த மீன் வாசனை பாத்திரத்தை விட்டுப் போகாமல் இருக்கும். இந்த பிரச்னை நம் எல்லோருடைய வீட்டிலுமே இருந்திருக்கும். அதை எப்படி போக்குவது?… சீயக்காய்த்தூளையும் புளியையும் சேர்த்து பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரத்தில் வாடை போய் பளபளப்பாகும்.

வெங்காயத்தைப் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து முதல்நாள் இரவே ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் காலை எடுத்து வெட்டினால் கண்ணில் தண்ணீர் வராமல் இருக்கும்.


இஸ்திரி பெட்டியின் அடியில் உள்ள தீய்ந்த கறையைப் போக்க அதன்மேல் சமையல் எண்ணெயைத் தடவி, சிறிது நுரம் ஆன் செய்துவிடுங்கள். சிறிதுநேரம் கழித்து ஆஃப் செய்துவிட்டு ஈரத்துணியால் துடைத்துவிட்டால் கறை போய்விடும்.

ஈரத்துணியால் வாழைப்பழத்தைச் சுற்றி வைத்திருந்தால் ஒரு வாரம் வரையிலும் வாழைப்பழம் தோல் கருத்துப்போகாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.

வளையல், தோடு போன்ற தங்க நகைகளை பஞ்சில் சுற்றி வைத்தால் அது புதுப்பொலிவுடன் புதுசு போலவே இருக்கும்.


டூத் பேஸ்ட்டை வெந்நீரில் சிறிதுநேரம் போட்டு வைத்திருந்து சிறிதுநேரம் கழித்து பிதுக்கினால் கடைசி சொட்டு வரை பேஸ்ட் வீணாகாமல் பயன்படுத்த முடியும்.

காய்ந்த எலுமிச்சைப் பழத்தை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

புத்தக அலமாரிகளில் நாஃப்தலின் உருண்டைகளைப் போட்டு வைப்பதைவிட கற்பூரத்தைப் போட்டு வைத்தால் பூச்சிகளும் வராது. அலமாரியைத் திறந்தால் வாசனையாகவும் இருக்கும்.

மிதியடிகளுக்கு அடியில் அதே அளவில் செய்தித்தாளைப் போட்டு வைத்தால் மிதியடிகளின் மீது உள்ள மண் பேப்பரில் அப்படியே இறங்கிவிடும். அவ்வாறு இருந்தால் தினமும் மிதியடிகளைப் பராமரிப்பது மிக எளிது.

வெள்ளிப் பாத்திரங்களில் கற்பூரம் போட்டு வைத்தால் வெள்ளி கருக்காமல் இருக்காது.

இதுபோன்று ஏராளமான வீட்டுப் பராமரிப்புகள் இருக்கின்றன. இவற்றை மனதில் வைத்துக் கொண்டால் நம்முடைய வீட்டை மிக எளிமையாகப் பராமரிக்க இயலும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!