சரவணபவ என்னும் மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா..?


கந்த சஷ்டி விரதம் தொடங்கிவிட்டது. சஷ்டி விரதம் விருந்து தனக்குத் தேவையானதை முருகப் பெருமானிடம் கேட்டால் கேட்டது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு.

அதனாலேயே குழந்தையில்லாமல் ஏங்குபவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று மக்கள் நம்பினர். அதனால்தான் சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி வந்தது.

அந்த சஷ்டி விரதத்தின்போது முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்தும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடியும் வழிபடுவது வழக்கம்.

அதோடு முருகனுக்கு உகந்த முக்கிய மந்திரமான சரவணபவ என்று சொல்லிக் கொண்டே மனதில் வேண்டிக்கொள்வார்கள்.

ஆனால் அந்த சரவணபவ என்னும் மந்திரத்துக்கு நம்மில் பலருக்கும் அர்த்தம் தெரியாது. அதை தெரிந்து வழிபட்டால் இன்னும் சிறப்பு.

ச – லட்சுமி கடாட்சம்
ர- சரஸ்வதி கடாட்சம்
வ- மோட்சம்
ண- சத்ருஜெயம்
ப- ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு வாழ

இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்தால் முருகப் பெருமானிடம் நீங்கள் கேட்டது அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!