கண் பார்வையை மேம்படுத்துவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்!

எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது.

அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் உலர் வடைதல், கண் சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கண்களின் நலன் பேணுவதற்கும், கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு…

* நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும். பாதாமை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.

* கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும். கேரட்டை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். சாலட்டுகள், சூப்களாக தயாரித்தும் பருகலாம். உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை. மாகுலர் சிதைவை தடுக்கக்கூடியவை.

பெர்ரி பழங்கள், குடை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகொடா, கீரை, ப்ரோக்கோலி, பட்டாணி போன்வைகளில் இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!