கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க இதை காலை உணவாக உட்கொண்டாலே போதும்..!


காலை உணவு என்பது நாம் அனைவரும் கட்டாயமாக சாப்பிட வேண்டிய ஒன்று. காலை உணவை தவிர்ப்பது சிறந்ததல்ல எனும் காரணத்திற்காக கையில் கிடைக்கும் ஏதோ ஒன்றை உட்கொண்டு தங்களது வேலைகளை செய்ய ஆரம்பிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்கள்.

ஆனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடிய, கொழுப்பை கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் உடல் எடையை குறைக்கக் கூடிய ஒன்றை காலை உணவாக உட்கொண்டால் எவ்வாறிருக்கும்?

ஆம், இத்தனை அற்புதங்களையும் நிகழ்த்தக் கூடிய காலை உணவை எவ்வாறு தயாரிப்பது எனப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
01. ஒரு கோப்பை ஓட்ஸ்
02. இரண்டு கோப்பை தண்ணீர்
03. இரண்டு தேக்கரண்டி வெனிலா பவுடர்
04. ஒரு தேக்கரண்டி இலவங்கப் பொடி
05. இரண்டு மேசைக்கரண்டி தேன்
06. உப்பு சிறிதளவு
07. 04 மேசைக்கரண்டி ஷpயா விதைகள்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், இலவங்கப் பொடி மற்றும் வெனிலா தூளை சேர்த்து அதனை கொதிக்க விடவும். குறித்த கலவை கொதித்தவுடன் அடுப்பைக் குறைத்து இந்த கலவையுடன் ஓட்ஸை சேர்க்கவும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கழிந்தவுடன் குறித்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி மேலும் 5 நிமிடங்கள் நன்றாக மூடி வைக்கவும்.

கடைசியாக தேன் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு கிளரி அதனுடன் ஷpயா விதைகளை சேர்க்கவும்.

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குவதோடு கொழுப்பை குறைத்து இதயத்தின் செயற்பாட்டை சீராக்குகின்றது.-Source: tamil.eenaduindia

அதே போன்று ஷpயா விதைகளில் உள்ள ஒமேகா 3, கல்சியம் மற்றும் ஒமேகா 6 என்பன இதய செயற்பாட்டிற்கு உதவி புரிவதுடன் ஒவ்வாமை ஏற்படாமலும் தடுக்கின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!