நீரிழிவு நோயாளிகள் தேன், பனங்கற்கண்டு சாப்பிடலாமா?

நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது. நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது.

எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.

தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!