உடல் எடையை வேகமாக குறைக்க இருக்கவே இருக்கிறது 2 வழிகள்… என்ன தெரியுமா..?


உடல் எடையை குறைக்க நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்காக எளிய இரண்டு வழிமுறைகள் இதோ:-

சூடான நீரில் அரை ஸ்பூன் பட்டைத்தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும். அதே சமயம் செரிமானம் சம்மந்தமான பிரச்சனையை இது தீர்க்கும். அதனோடு தேவை இல்லாத கொழுப்புகளை இது குறைக்கும்.


ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள். அது கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ஒரு ஸ்பூன் பட்டைத் தூள் போட்டு கொதிக்க வையுங்கள்.

பட்டைத் தூளுக்கு பதிலாக, பட்டையை அப்படியே கூட போடலாம்.

கொதிக்க வைத்த அந்த நீரை தொடர்ந்து குடித்து வர உங்களின் எடை குறையும்.


இலவங்கப்பட்டை செரிமானத்தை மேம்படுத்தி, இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தும்,

அதோடு கார்போஹைட்ரேட்டுகள் எனர்ஜியாக மாற்ற உதவுகிறது.

மேலும் அது நீங்கள் சாப்பிட்ட உணவிலிருந்து சத்துக்களின் ஜீரணத்தை அதிகரிக்கிறது மற்றும் முழுமையாக உணரவும் பசியைக் குறைக்கவும் உதவி செய்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!