உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டை இப்படி செய்து சாப்பிடுங்க…!!


உடலில் உள்ள பல்வேறு நோய்களைத் தீர்ப்பதில் பூண்டுக்கு மிக முக்கியப் பங்குண்டு. அதிலும் உடல் எடையைக் குறைப்பதில் பூண்டு பெரிதும் உதவுகிறது.

இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

பூண்டு கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

பூண்டு – 10-15 பல் (தோலுரிக்கவும்)
வறுத்து, உடைத்த புழுங்கல் அரிசி – ஒரு கப்,
சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைக்கவும்),
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
இந்துப்பு – தேவையான அளவு,
மோர் – ஒரு கப், தண்ணீர் – 4 கப்.


செய்முறை:

உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 4 விசில்விட்டு இறக்கவும்.

ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம். ஆனாலும் மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிட்டதுபோல் இருக்கும்.

இந்த கஞ்சி உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.

உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!