வாட்ஸ்அப் அப்டேட்… க்ரூப்களில் புதிய வசதி அறிமுகம்…!


வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புது அம்சங்கள் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் க்ரூப் வீடியோ கால் என்றும் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பீட்டா மூலம் புதிய அம்சங்களை சோதனை செய்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் WABetaInfo புதிய அம்சம் சார்ந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் மூலம் ஒரே சமயத்தில் பலருக்கும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஃபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ கால் அம்சம் போன்றே வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சமும் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மெசன்ஜரில் வீடியோ கால் அம்சமும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மெசன்ஜரில் வீடியோ கால் மேற்கொள்ளும் போது ஒரே சமயத்தில் பலருடன் பேச முடியும்.

எனினும் வாட்ஸ்அப் வீடியோ கால் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.

கடந்த ஆண்டு அக்போர் மாத வாக்கில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது. இந்த அம்சம் வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு அதன் பின் ஐ.ஓ.எஸ். இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வாட்ஸ்அப் அம்சமங்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும், அதன்பின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!