அசரவைக்கும் சலுகைகளுடன் ஒன்பிளஸ் 5வு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்…!


ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் லாவா ரெட் நிற ஸ்பெஷல் எடிஷன் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் மற்றும் க்ரோமா விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்தது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், காலதர் தினத்தை முன்னிட்டு ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை பல்வேறு சலுகைகளுடன் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


ஒன்பிளஸ் 5T லாவா ரெட் சிறப்பு சலுகைகள்:

– தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1,500 உடனடி தள்ளுபடி

– பிரபல வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு 3 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி

– ஒன்பிளஸ் வலைத்தளம் அல்லது பெங்களூரு ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களில் வாங்குவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக் மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வேரியண்ட்களுக்கு உறுதி செய்யப்பட்ட எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.

– அமேசான் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 5 மற்றும் 5T வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரெஃபரல் திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

ஜனவரி 30, 2018-க்குள் ஒன்பிளஸ் 5 அல்லது 5T வாங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இரண்டு ரெஃபரல் குறியீடுகள் அனுப்பப்படும்.


இவற்றை கொண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒன்பிளஸ் 5T வாங்குபவர் மற்றும் அதனை வழங்கியவருக்கு மூன்று மாதங்களுக்கு பிரான்டு வாரண்டி வழங்கப்படுகிறது.

ரெஃபரல் குறியீட்டை இரண்டு அல்லது அதற்கும் அதிக முறை பயன்படுத்தப்படும் போது குறியீட்டை வழங்கியவருக்கு அதிகபட்சம் 6 மாதங்களுக்கு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது.

மேலும் ரெஃபர் குறியீட்டை வழங்குவோர் மற்றும் அதனை பயன்படுத்தும் முதல் 500 பேருக்கு புல்லட் வி2 இயர்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் ரூ.37,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மிட்நைட் பிளாக் எடிஷனும் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!