போன் கால்களை ஒட்டு கேட்பவர்களுக்கு ஆப்பு வைத்த புதிய ‘ஆன்ட்ராய்டு பி’ ஓஎஸ்..!


போன் கால்களை ரெக்கார்டிங் செய்வதை அறியும் வகையில் புதிய ஆன்டராய்டு ஒ.எஸ் வெர்சனை கூகுள் வெளியிடவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தனது புதிய ஆன்ட்ராய்டு ஓ.எஸ் வெர்சனை வெளியிடுவது கூகுளின் வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஓ.எஸ் வெர்சனை விரைவில் வெளியிடவுள்ளது. அதற்கான டீஸரை ஏற்கனவே டுவிட்டரில் வெளியிட்டது.

அதை தொடர்ந்து, அதன் அறிமுக நிகழ்ச்சி காலிபோர்னியாவின் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் மே மாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ‘ஆன்டராய்டு பி’ என்றழைக்கப்படும் இந்த புது ஒ.எஸ் வெர்சனில் கால் ரெக்கார்டிங் டோன் என்ற சிறப்பம்சம் உள்ளது என தெரியவந்துள்ளது.


இதன் மூலம், யாராவது நம் கால்களை ரெக்கார்டிங் செய்தால், ரெக்கார்டிங் செய்யத்தொடங்கிய 15 நொடிகளில் ஒரு ஒலி எழுப்பப்படும். தொடர்ந்து 15 நொடிகளுக்கு ஒருமுறை இந்த சத்தம் கேட்கும். அதன் மூலம் நாம் சுதாரித்துக்கொள்ளலாம்.

இது தேவையில்லை என்று நினைப்பவர்கள், இந்த தேர்வை முடக்கவும் முடியும். இது ஒழுங்குமுறை இணக்க தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது, ஒன் பிளஸ், நோக்கியா போன்ற சில மொபைல் நிறுவனங்கள் ஆன்டராய்டு பி-ஐ ஏற்றுக்கொள்ள உறுதி செய்துள்ளது.-Source: tamil.eenaduindia

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி