தினமும் சூடான டீ குடிப்பவரா..? இனிமேல் அதிகமாக குடிக்காதீங்க..!


நீங்கள் தினசரி சிகரெட் குடிப்பவரா? அல்லது தினசரி மது அருந்துபவர்களா? , இனிமேல் நீங்கள் நீங்கள் டீயை மிகவும் சூடாக குடிக்காமல், ஆறிய பிறகு குடித்து மகிழுங்கள். ஏனெனில் மிகவும் சூடான டீ பருகினால் உங்களுக்கு உணவுக்குழாய் ( esophageal ) புற்றுநோய் வருதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மருத்துவ கல்லூரி வெளியிட்டுள்ள ஆனல்ஸ் ஆப் இன்ட்ர்னல் மெடிசன்ஸ் என்ற ஆய்வறிக்கையில் (the Annals of Internal Medicine), சூடான அல்லது மிகவும் சூடான டீ குடித்தால், உணவுக் குழாயில் இரண்டு முதல் ஐந்து மடங்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்குழாய் புற்று நோய் உலகின் 8வது பெரிய மோசமான புற்றுநோயாக பார்க்கப்படுகிறது. இந்த நோயால் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழப்பதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உணவுக்குழாய் புற்று நோய்க்கு காரணம் புகைப்பிடிப்பது , மது அருந்துவது தான் காரணம் என கூறப்பட்டது. இத்தோடு சேர்த்து மிகவும் சூடான பானங்கள் அருந்துவதும் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக சீனாவில் 5 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் எந்த மாதிரி டீ குடிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. உதாரணமாக மிகவும் குளிர்ந்த பிறகு, சூடாக அல்லது மிகவும் சூடாக, அல்லது கொதிக்க, கொதிக்க என்று கேட்கப்பட்டது.

இதில் டீயை கொதிக்க கொதிக்க, மிகவும் சூடாக குடிப்பதாக கூறியவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது தெரியவந்ததாக நோய்த் தொற்று அறிவியல் பேராசிரியர் ஜன் எல்வி தெரிவித்தார்.

அதே நேரம் சூடான டீ குடிப்பதால் மட்டுமே புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகமான மது அருந்துபவர்கள் அல்லது அதிகமான புகைப்பிடிப்பவர்களுக்கே, சூடான டீ அருந்துவதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேராசிரியர் ஜன் எல்வி குறிப்பிட்டுள்ளார்.-Source: tamil.eenaduindia

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி