இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் தம்பதிகள் இதை கட்டாயம் படிங்க..!


அழகான குடும்பம் ஒன்றை அமைக்க வேண்டும் என பலர் நினைப்பதுண்டு. முதல் குழந்தை பிறந்து விட்டாலே இரண்டாவது குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என சமூகம் கேள்வி தொடுக்க ஆரம்பித்து விடும்.

குழப்பத்திற்கு மத்தியில் இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் பல பெற்றோர், சமூகத்தில் நிலவும் சில கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முக்கிய விடயங்களை கவனத்திற் கொள்ளாது சிக்கலில் விழுந்து விடுகிறார்கள்.

உண்மையாக எந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாம் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு இடையிலான வயது இடைவெளி
முதலாவது குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையில் குறைந்தது 18 மாத இடைவெளி இருப்பது சிறந்தது என வைத்தியர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் 18 மாத இடைவெளி கூட இன்றி அதற்கு முன்னதாகவே தாய் ஒருவர் கருத்தரிக்கும் சந்தர்ப்பத்தில் வயிற்றில் உள்ள சிசு இறந்தே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், பிறக்கும் குழந்தை குறைமாத குழந்தையாக இருக்கலாம் எனவும் எடை குறைந்த குழந்தையாக பிறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, குறித்த தாயும் தூக்கமின்மை மற்றும் கருப்பையில் தொற்று போன்ற நிலைமைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


5 வருடங்களுக்கும் மேலான இடைவெளி
முதல் குழந்தை பிறந்து 5 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதும் சிறந்ததல்ல. ஏனெனில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்குமாயின் அப்போது உயர் இரத்த அழுத்தம், குறைமாத பிரசவம் மற்றும் கர்ப்ப காலத்தின் போது குறைவான எடை போன்ற நிலைமைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேரிடும்.

மிகக் குறைந்த இடைவெளியில் குழந்தை பிறத்தல்
ஒரு தாய்க்கு முதலாவது குழந்தை பிறந்து மிகக் குறுகிய இடையிவெளியில் இரண்டாவது குழந்தை பிறப்பதும் சிறந்ததல்ல. ஏனெனில், ஒரு குழந்தையை பிரசவித்த தாயின் உடல் பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில காலம் தேவை. குறுகிய கால இடைவெளியில் அந்த தாய் கருவுறுவாறாயின் அவரது தேகாரோக்கியம் பாதிக்கப்படும்.


3 வருட இடைவெளிக்கு பின் இரண்டாவது குழந்தை பிறத்தல்
முதலாவது குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையிலான வயது இடைவெளி 3 வருடங்களாக இருப்பதே சிறந்தது என இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில், குறித்த 3 வருட காலத்தில் தாயின் தேகாரோக்கியம் சிறந்த நிலைக்கு திரும்புவதாகவும் அவர் நல்ல நிலையில் குழந்தையை பெற்றடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இடையிலான நல்லுறவு
மேற்குறிப்பிட்டவாறு சிறந்த முறையிலான இடைவெளி காணப்படுமிடத்து குழந்தைகள் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பர் எனவும் அவர்களுக்கு இடையிலான சச்சரவு குறைந்த அளவில் காணப்படுமெனவும் கண்டறியப்பட்டுள்ளது.-© tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி