வெள்ளை அரிசியை இனியுமா சாப்பிட போறீங்க.. இவ்ளோ ஆபத்திருக்காமே!

தினமும் ஒரு வேளையாவது அரிசி உணவு இருக்க வேண்டும் என்னும் போதே வெள்ளை அரிசி நல்லது செய்யுமா அதை சாப்பிடலாமா என்ற குழப்பமும் பலருக்கு உண்டு. அந்த வகையில் வெள்ளை அரிசி நல்லதா என்பதை பார்க்கலாம்.


உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜப்பானியர்கள் வெள்ளை அரிசியை தங்கள் உணவின் மிக முக்கிய பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இழக்கப்படுகிறது. வெள்ளை அரிசியில் அதன் தவிடு மற்றும் கிருமி நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது சுவையை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டுக்கவும், சமையல் பண்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

இருப்பினும் வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து பி வைட்டமின்களான ஃபோலிக் அமிலம், நியாசின், தியாமின் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. வெள்ளை அரிசி சாப்பிடுவது ஆரோக்கியமானதா எந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம் என அறிவோம்.

​வெள்ளை அரிசி என்றால் என்ன :

வெள்ளை அரிசி என்பது உமி, தவிடு, கிருமி நீக்கப்பட்ட அரிசியே தவிர வேறில்லை. அரைத்த பிறகு அரிசி பொதுவாக பாலிஷ் செய்யப்படுகிறது இந்த வெள்ளை அரிசியில் தவிடு மற்றும் கிருமி இல்லாமல் இருப்பது தானியமானது அதன் புரதத்தில் 25% ம் 17% முக்கிய ஊட்டச்சத்துக்களையும் இழக்கிறது.

வாரத்திற்கு 5 முறையாவது வெள்ளை அரிசியை உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் வெள்ளை அரிசியை விரும்ப முக்கிய காரணம் அதன் சுவை நன்றாக இருக்கும். மேலும் விரைவாக சமைக்கும் முடியும் என்பது தான். இந்த வெள்ளை அரிசியின் நன்மை தீமைகளை தொடர்ந்து பார்க்கலாம்.

​வெள்ளை அரிசி நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்துகிறது :

வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் வெள்ளை அரிசியை கூடுதலாக சாப்பிடுவதால் நீரிழிவு நோயின் அபாயம் 23% அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெள்ளை அரிசியை முழு தானிய கார்போ ஹைட்ரேட் டுகளுடன் (பழுப்பு அரிசி உட்பட) மாற்றுவது நீரிழிவு நோய் அபாயத்தை குறைக் கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெள்ளை ரொட்டி மற்றும் பிற சர்க் கரை உணவுகள் உட்பட சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட் கொள்வது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​வளர்ச்சிதை மாற்ற பிரச்சினைகள்

ஒரு கொரிய ஆய்வின் படி, வெள்ளை அரிசியை நீண்ட காலத்திற்கு உட்கொள்பவர்கள் வளர்ச்சிதை மாற்ற ஆபத்தை சந்திக்கின்றனர். மற்ற தானியங்களை உட்கொள்ளும் பெண்களைக் காட்டிலும் வெள்ளை அரிசியை உட்கொள்ளும் பெண்களுக்கு வளர்ச்சிதை மாற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் உடல் பருமன், டிஸ்லிபிடெமியா போன்ற அறிகுறிகளை பெறுகின்றனர். கொரிய ஆய்விலும், வெள்ளை அரிசியை அதிகளவு உட்கொள்வது பருவப் பெண்களின் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

​உடல் எடை அதிகரிப்பு

வெள்ளை அரிசி உள்ளிட்ட உணவு முறைகள் உடல் பருமன் விகிதத்தை அதிகரிக்கிறது. எனவே வெள்ளை அரிசியுடன் முழு தானியங்களையும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

​வெள்ளை அரிசி பயன்கள்

BRAT உணவு முறையில் வெள்ளை அரிசி ஒரு முக்கிய அங்கமாகும். வயிற்று போக்கு சரியாக இவைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் மலத்தை உறுதியாக்க உதவுகிறது. வெள்ளை அரிசி எளிதில் சீரணமாகும் என்பதால் இது கிரோன் நோய், அழற்சி குடல் நோய் மற்றும் அல்சரேடிவ் பெருங்குடல் அழற்சி போன்ற செரிமான பிரச்சினைகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

​பழுப்பு அரிசியின் நன்மைகள்

பழுப்பு அரிசி வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. பழுப்பு அரிசியை நீண்ட கால உட்கொள்ளுதல் மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்ற அளவுகள் மற்றும் எண்டோடெலியல் செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. பழுப்பு அரிசியில் ஆர்சனிக் என்ற இயற்கையான கனரக உலோகம் காணப்படுகிறது. எனவே இந்த பழுப்பு அரிசியை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை பாதித்து புற்றுநோயை உண்டாக்குகிறது.

வெள்ளை அரிசியை அளவாக சரியான முறையில் சரியான பொருள்களுடன் சேர்த்து எடுத்துகொள்ளலாம். எனினும் ஒரு கப் அரிசியுடன் இரண்டு கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நன்மை பெறலாம். மேலும் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே அரிசி உணவை எடுப்பதும் நன்மை பயக்கும்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!