பசியின்மை, ஜீரண மண்டலம் பாதிப்பை போக்கும் முத்திரை!

கொரோனா வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

இப்பொழுது கொரோனா வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

அபான முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரல், மோதிரவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

பிரிதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் பெருவிரல் நுனியை இணைக்கவும் மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும், காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நல்ல பலன்கள் கிடைக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!