50 வயதுக்கு பிறகு எப்படி ஆரோக்கியமாக இருப்பது..?

50 வயதுக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கமின்மை, உணவு தரத்தில் குறைபாடு ஆகியவை 60 சதவீத அகால மரணத்துக்கும், ஆயுட்காலத்தில் 7.4 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை குறைவதற்கும் காரணமாக அமைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 50 வயதுக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘‘ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும்போது பெண்களின் ஆயுட்காலம் 31.7 ஆண்டுகள் முதல் 41.1 ஆண்டுகள் வரையிலும், ஆண்களின் ஆயுட்காலம் 31.3 முதல் 39.4 ஆண்டுகள் வரையிலும் அதிகரிக்கும். ஆரோக்கிய வாழ்க்கை முறை புற்றுநோய், இதயநோய், நீரிழிவு நோய், இறப்பு போன்ற அபாயத்தை குறைக்க உதவும். நோய் இல்லாத வாழ்க்கை முறையானது ஆயுட்காலத்தை அதிகரிப்ப தோடு சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை குறைப்பதற்கும் உதவும்.

உணவு வகைகளை தரம் பிரித்து சாப்பிடுதல், சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்க்கை முறையை பின்பற்றுதல், கொழுப்பு உணவுகளை கட்டுப்பாடுகளுடன் உண்ணுதல் போன்றவை ஆயுட்காலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. 50 வயதுக்கு பிறகு மது, புகை பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் நாட்பட்ட நோய்கள் எதுவும் இல்லாமல் ஆயுட்காலத்தை ஆனந்தமாக அனுபவிக்கலாம்’’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

50 வயதிற்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட்டாலே போதுமானது. வயது அதிகரிக்கும்போது தூங்கும் நேரம் குறையும். பகல் பொழுதில் தூங்குவதுதான் அதற்கு காரணம். அது இரவு தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!