குஷ்ட நோயை குணப்படுத்த சில நாட்டு வைத்தியங்கள்.. கண்டிப்பா இத படிங்க..!


தொழுநோயாளிகளைப் பார்த்தாலே பயந்து, அவர்களை நெருங்காமல் ஒதுங்கிவிடுவோம். அப்படி செய்யாமல், சில நாட்டு வைத்தியங்கள் மூலம் தொழுநோயை குணப்படுத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு தரலாம்.

1. வல்லாரை இலையைக் காயவைத்துப் பொடியாக்கி, அதனுடன் பரங்கிச் சக்கையையும் பொடியாக்கிச் சேர்த்து, தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஒரு மாதத்தில் குணம் தெரியும். இதைத் தொடர்ந்து ஓர் ஆண்டுக்குச் சாப்பிட்டால் குஷ்ட நோய் முழுமையாகக் குணமாகும்.

2. வெண் குஷ்ட நோயின் அறிகுறி தெரிந்தவுடன் பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் குணம் கிடைக்கும்.

3. வேப்பம் பூவைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீரை வடிகட்டிக் குடித்து வந்தால் குஷ்ட நோய் குணமாகும்.

4. கோணிக் கிழங்கைக் காய வைத்துப் பொடியாக்கி, காய்ச்சிய பாலுடன் கலந்து குடித்தால் குஷ்டரோகம் மட்டுப்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், முழுமையான குணம் பெறலாம்

5. வேப்ப மரத்தில் இருந்து இளம் பிசினை எடுத்து, தண்ணீரில் கலந்து குடித்தால் குஷ்ட நோய் குணமாகும்.

6. தொழுநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், தளிர் மருதாணி இலையையும், பூவையும் பறித்து சாறு எடுத்து, காலை மாலை இரு வேளையும் அரை ஸ்பூன் சாற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால், தொழுநோய் குணமாகும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!