சிறுநீர் கழிக்க சென்ற மாணவனுக்கு சக மாணவர்களால் நிகழ்ந்த கொடூரம்… துடிதுடித்த பெற்றோர்…!


திருப்பூரில் மாணவரின் வயிற்றில் சேப்டி பின்னை திணித்த சக மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர்-காங்கயம் ரோடு சுகுமார் நகர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ராஜூ.

இவரது மனைவி விமலா. இருவரும் பனியன் நிறுவன தொழிலாளர்கள். இவர்களது மகன் வருண் (10). திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை வருண் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். இடைவேளை சமயத்தில் சிறுநீர் கழிக்க சென்ற போது மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அப்போது வருண் முகத்தை சில மாணவர்கள் கைக்குட்டையால் மூடி அவரது வாயில் சேப்டி பின்னை வைத்து திணித்துள்ளனர். வருண் அதனை விழுங்கி விட்டார். இது குறித்து ஆசிரியரிடம் தெரிவித்தார்.

பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பதறியடித்து பள்ளிக்கு வந்த பெற்றோர், மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் சேப்டி பின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் பயப்பட தேவையில்லை. வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் அதிக அளவு குடித்தால் மலத்தில் வெளியே வந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மாணவன் வருணை சிகிச்சைக்காக அழைத்து வந்த தாய். இது குறித்து மாணவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் வாயில் சேப்டிபின் திணித்த சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தோம்.

ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை கண்டு பிடிக்க போலீசில் புகார் அளித்தோம் என்றனர்.

பெற்றோர் புகாரை தொடர்ந்து மாணவரின் வயிற்றில் சேப்டி பின்னை திணித்த சக மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!