நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பைக் குறைக்கும் தேநீர் வகைகள்!

பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.


உடல் எடைக் குறைப்பு முயற்சியில், உடற்பயிற்சிக்கு அடுத்தபடியாக இருப்பது தேநீர். அதிலும் சாதாரணத் தேநீரை விட மூலிகைத் தேநீர் அதிக பலன் கொடுக்கும். மன அழுத்தத்தை குறைத்து, தினசரி வாழ்வை சீராக்க உதவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

உடல் எடையை சீராக்கும். உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

இதில் பலரும் விரும்புவது கிரீன் டீ. குறைந்த நாட்களில் மிதமான எடைக் குறைப்புக்கு உதவும். தினமும் இரண்டு வேளை பருகலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.

லெமன்கிராஸ், இஞ்சி, லவங்கப்பட்டை கலந்த டீயை பகல் வேளையில் குடிக்கலாம். இது உணவை எளிதில் செரிக்க உதவும். லெமன்கிராஸில் உள்ள வேதிப்பொருட்கள் மனச்சோர்வை நீக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆவாரம் இலைகள், பெருஞ்சீரகம், இஞ்சி, லவங்கப்பட்டை, மிளகுக் கீரை மற்றும் பச்சை தேயிலை சாறு கலந்து மூலிகை தேநீர் குடிக்கலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையைச் சீராக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

செம்பருத்தி, லவங்கப்பட்டை, துளசி, இஞ்சி, கொத்தமல்லி விதைகள், மஞ்சள், சோம்பு, வெந்தயம், அன்னாசி பூ மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களைக் கலந்து தேநீர் தயாரித்துப் பருகலாம். சுவையும் மணமும் உள்ள இந்த தேநீர் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும்.

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, உடலின் திசு சிதைவை கட்டுப்படுத்தி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள கொலாஜன் மற்றும் இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றி, வெப்பத்தைக் குறைக்கும்.

இது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி, இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!