நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஆசனம்!

மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். இந்தவகையில் இந்த ஆசனம் மலச்சிக்கலை எளிதில் போக்க உதவும்.

இன்று பலரும் அவதிப்படும் முக்கிய நோய்களுள் மலச்சிக்கலை ஒன்றாகும். இது வந்தாலே பலரும் அவதிப்படுவதுண்டு. மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். இந்தவகையில் மலாசனம் வைத்து மலச்சிக்கலை எளிதில் போக்க முடியும்.

அதாவது, “மாலா” என்றால் “மாலை” என சமஸ்கிருதத்தில் பொருள்படும். எனவே, மாலை போன்ற நிலையில் உட்கார்ந்து இதை செய்ய வேண்டும். தற்போது இந்த மலாசனத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை

முதலில் காலை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து பாதி உட்காரும் நிலைக்கு மூச்சை வெளியேற்றிக்கொண்டே அமர வேண்டும்.

அதன் பின்னர் கைகளை குவித்து ..கைககளின் மூட்டுகள் ..கால்களின் மூட்டுகளை விலக்கும் வண்ணம் அமர்ந்து …பார்வை மேல்நோக்கி இருக்க….கைககள் வணக்கம் வைக்க வேண்டும்….(படத்தில் உள்ளவாறு)சுருக்கமாக சொல்ல போனால் பாதி உட்கார்ந்து மலம் கழிக்கும் நிலையில் இருந்து கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

இந்த ஆசனத்தில் 30 முதல் 60 நொடிகள் வரை இருக்கவும்.இந்நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்க வேண்டும். 3 முறை இம்மாதிரி செய்யலாம் …

ஒவ்வொரு முறை செய்த பின்னரும் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவும். இந்த பயிற்சியினால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக ஏற்படாது. தொடைகள் மலக்குடலை நன்கு அழுத்துவதால்…மலக்குடல் நன்கு வேலை செய்யும்.

உங்களின் நடு முதுகு மிகவும் பலமாக இருக்கும். மேலும், கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!