நிம்மதியான தூக்கத்திற்கு 10 வழிகள்.!

பெட்ரூமில் செய்யக் கூடிய இந்த மாற்றமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கலாம். இரவு நிம்மதியான தூக்கத்திற்கு இந்த 10 வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.


இரவுத் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. ஆனால் அது இன்றைக்கு பலருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு விஷயமாகிவிட்டது. இதற்கு வாழ்க்கை முறை ஒரு காரணமாக இருந்தாலும், நம் சுற்றுச்சூழலும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் தூங்கும் படுக்கை அறையை சற்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயலுங்கள். இந்த மாற்றமும் உங்களுக்கு தூக்கத்தை அளிக்கலாம். எனவே எப்படி படுக்கை அறையை அலங்கரிப்பது என்று பார்க்கலாம்.

  1. மாலை பொழுதில் இருந்தே நீல விளக்குகளின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்
  2. பகலில்அறைக்குள் வெளிச்சம் பிரகாசமாக இருப்பதை உறுதிப்படுத்திடுங்கள்.
  3. மாலைக்கு பிறகு காபின் கலந்த பானங்களை பருகாதீர்கள்.
  4. ஒழுங்கற்ற தூக்கம் அல்லது பகல் நேர தூக்கத்தை தவிருங்கள்.

5, இரவில் மது அருந்தும் பழக்கத்தை தவிருங்கள்

  1. இரவில் காலதாமதமாக சாப்பிடாதீர்கள்.
  2. உடல் குளிர்ச்சியடையும் வரை நன்றாக குளியுங்கள்.
  3. படுக்கை, தலையாணை, மெத்தை போன்றவை தூங்குவதற்கு சவுகரியமாக இருக்க வேண்டும்.
  4. தினமும தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சியை தவிருங்கள்.
  5. தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் உள்பட திரவ உணவுகளை சாப்பிடாதீர்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!