இந்தப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…?


லிச்சி பிங்க் அல்லது வெண்மை நிறமுடைய அழகான பழ வகை ஆகும். உலகிலேயே இதனுடைய இனத்தில் வேறு எந்த பழமும் இல்லாததால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பழம்.

பலவிதமான நண்மைகளை உள்ளடக்கியது இந்த பழம் என்று சொல்வது மிகையல்ல. இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது இந்த மணம் அதிகம் கவரப்படும்.

ஆசிய நாடுகளில் முதன் முதலில் இனிப்புகள் செய்வதில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேற்கத்திய சந்தைகளில் விற்கப்பட்டு, பல நட்சத்திர உணவகங்களில் இதனை பயன்படுத்த தொடங்கினர். முற்காலத்தில் இது பணக்காரர்களில் பழமாக பார்க்கப்பட்டது.

உடல் பருமன், புற்று நோயை தடுப்பது,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது,இரத்த அழுத்தத்தை குறைப்பது, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து போராடுவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை இந்த பழத்தினால் உண்டாகும் நன்மைகளுக்கும் இதன் ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களுக்காகவே இந்த பழம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.

பெரும்பாலும் உலர் லிச்சி பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் மணத்திற்காக பார்க்காமல் உலர் பலன்களை வாங்கி உண்ணும்போது அதிக நன்மைகளை அடையலாம்.

ஊட்டச்சத்து விபரங்கள் :
லிச்சி பழத்தில் பலவகை ஊட்டச்சத்துகள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் b6, நியாசின், ரிபோபிளவின், போலேட் , தாமிரம்,பொட்டாசியம், பாஸ்போரஸ் , மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துகள் லிச்சியில் அதிகம் உள்ளது.நார்ச்சத்து, புரதம், பாலிபீனாலிக் கூறுகள் அதிக அளவில் உள்ளன.


லிச்சி உங்கள் தோற்றத்தை அழகாக்கும். மற்ற பிற நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமானத்திற்கு உதவுகிறது:
லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சிறந்த செரிமானத்தின் மூலம் குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது.குடலை தசைகளை மென்மையாக்கி வேகமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது .


நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது:
லிச்சியில் உள்ள குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். அஸ்கோர்பிட் அமிலம் என்ற அமிலத்தில் தினசரி உட்கொள்ளலில் 100% இந்த லிச்சியில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதுவே சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பணியாகும்.

லீச்சியில் உள்ள ப்ரோ அந்தோசைடனின் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த ஆய்வுகள் அவற்றின் வைரஸ் எதிர்ப்பு சக்திகளை நிரூபிக்கின்றன. லிச்சீடன்னின்A2 என்னும் லிச்சியில் காணப்படும் ஒரு கலவை, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மற்றும் காக்ஸ்சாக்கி வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் பரவுதலை தடுக்கிறது.


புற்று நோயை தடுக்கிறது:
லிச்சியில் காணப்படும் பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் ப்ரோ அந்தோசைடனின் என்ற கூறுகளும் வைட்டமின் சியை விட அதிக சக்தி வாய்ந்தது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன.இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளால் புற்று நோய் , இதய நோய், குடல் இயக்க மந்த நிலை, விரைவான வயது மூப்பு, போன்றவை ஏற்படும். இந்த பாலிபீனாலிக் கூறுகளால் இந்த அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது:
லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது. சோடியம் அளவு குறைந்திருக்கிறதும் இதே பயன் பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தின்போது நீரின் சமமான தன்மை ஒரு முக்கிய பகுதி ஆகும். இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது.

பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் ஒடுக்கமான தன்மை குறைகின்றது. இதன்மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.


இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:
தாமிரம் லிச்சி பழத்தில் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் பொதுவாக இரும்பு சத்துக்களுடன் தாமிரமும் இணைந்திருக்கும். இதனால் லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் உறுப்புகளுக்கும் செல்களுக்கும் ஆக்ஸிஜென் வேகமாக கிடைக்கப்பெறும்.

லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!