கழுத்தில் உள்ள கருமை விரைவில் மறைய தயிருடன் இதை சேர்த்து தடவுங்க..!


கழுத்தைச் சுற்றியுள்ள கருமை வியர்வை அதிகம் சேர்வதால் மற்றும் அழுக்குகள் சேர்வதால் வருகின்றது. பெண்களுக்கு முடியில் உள்ள எண்ணெய் கழுத்தில் படிவதால் தோன்றுகின்றது. இந்த கருமையை போக்குவதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சோப்பு போட்டு குளிக்கும்போது பீர்க்க நார் அல்லது சாஃப்ட் ஸ்கிரப்பர் கொண்டு கழுத்தை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.

குளிக்கும்போது சீயக்காய் தேய்த்து கழுத்தை சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் எண்ணெய் தேங்கி கழுத்து கருப்பாக மாறிவிடும்.

சிலருக்கு செயின் மற்றும் பாசிமணிகளாலும், கவரிங் நகைகளாலும் கருப்பாக மாறிவிடும். இது உராய்வினால் உருவாகக் கூடியது. தாலிக்கயிறு, நகைகளால் கருப்பானது வந்தால் அதை சரிசெய்ய சிறிது தேங்காய் எண்ணெய் செயினில் தடவினால் உராய்வு அதிகமாகாது.


தயிரை கழுத்தை சுற்றிப் போட்டால் போதும் சிறிது நாளில் கழுத்தில் உள்ள கருமை போகிவிடும். மேலும் கழுத்தில் உள்ள கருமை போக பேக்கிங் சோடா சிறந்தது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் நனைத்துக் குழைத்து கழுத்தில் தடவி வர கழுத்தில் உள்ள கருமை விரைவில் மறையும்.

முல்தானிமட்டி பவுடர் வாங்கி வந்து முகம் மற்றும் மூக்கின் ஓரம், உதட்டின் கீழ் பகுதி, கழுத்தைச் சுற்றி எங்கெங்கு கருமை உள்ளதோ அங்கெல்லாம் போட்டால் கருமை மறைந்து போய்விடும்.

எலுமிச்சை சாறைப் பிழித்து கழுத்தைச் சுற்றி அழுந்தத் தேய்த்து விட்டு சிறிது நேரம் காயவைத்து பின் குளிக்கலாம்.

தக்காளியை பிழிந்து கழுத்தைச் சுற்றி தேய்க்கவும். இதனால் கழுத்தைச் சுற்றியுள்ள கருமை நீங்கிவிடும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!