செம்பு நகைகள் ஏன் உடலில் பச்சை நிற படலத்தை உண்டாக்குகிறது? எச்சரிக்கை பதிவு!!


நம் அனைவருக்குமே செம்பு மோதிரம் அல்லது காப்பு போன்றவற்றை அணிந்திருந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியும். குறிப்பாக பெருமூளை வலி, மூட்டுகளில் உள்ள அழற்சி, மூட்டு பிரச்சனைகள், ஜிங்க் குறைபாடு போன்றவற்றை செம்பு நகைகளை அணிந்திருப்பன் மூலம் சரிசெய்து தடுக்கலாம்.

இருப்பினும், நம்மில் பலருக்கும் ஓரு சந்தேகம் எழும். அது செம்பு நகைகள் ஏன் சருமத்தில் பச்சை நிற படலத்தை உண்டாக்குகிறது என்பது. இக்கட்டுரையில் அது ஏன் என்றும், அப்படி பச்சை நிறத்தில் மாறுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளையுமா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காரணம் #1
செம்பு காப்பு அல்லது மோதிரங்களை அணிந்து கொண்டு வெயிலில் செல்லும் போது, உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் சருமத்தில் உள்ள எண்ணெய் போன்றவை சருமத்தில் பச்சை நிற காப்பர் கார்பனேட் படலத்தை உண்டாக்கும். இத ஓரு ஆக்ஸிடேஷன் வினையாகும்.

காரணம் #2
காற்றில் ஈரப்பசை அதிகம் இருந்தாலோ அல்லது காற்றில் சல்பர் அதிகளவில் இருந்தாலோ, செம்பு ஆபரணங்கள் வேகமாக சருமத்தில் பச்சை நிற படலத்தை உருவாக்கும்.

காரணம் #3
ஒருவர் அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொண்டாலோ அல்லது மாட்டிறைச்சியை உட்கொண்டாலோ, உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது, செம்பு நகைகளை அணிந்திருந்தால், அது பச்சை நிறத்தில் ஒரு படலத்தை சருமத்தில் உண்டாக்கி, உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதை உணர்த்தி, உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறும்.

நல்ல உணவு
செம்பு ஆபரணங்களால் சருமத்தில் பச்சை நிற படலம் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். சருமத்தில் பச்சை நிற படலம் உருவானால், நீரால் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

இதர நன்மைகள்
பல நூறு ஆண்டுகளாக செம்பு ஆபரணங்கள் அணிவதற்கு மற்றொரு முக்கிய காரணம், இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் இருப்பது தான்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!