தப்பி தவறி கூட இனி இரவு நேரத்தில் இத சாப்பிடாதீங்க.. ஆபத்து..!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகளை குறிப்பிட்ட நேரங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அதற்கான காரணம் கேட்காமல் நாம் தற்போது வரை பின்பற்றி வருகிறோம்.

ஆனால் இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும். இதெல்லாம் சாப்பிட கூடாது என்ற விதிமுறை எதுவுமில்லை. தங்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஒரு சில உணவுகளை இரவு நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அவ்வாறு எந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். சிலர் மது அருந்திவிட்டு அப்படியே தூங்குவதால் வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ளது தங்குவதால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இரவு நேர உணவுகளுடன் சோடாவை சேர்ப்பது மிகவும் தவறு. அது குடல் வால்வுகளை முற்றிலும் பாதித்துவிடும். இயற்கையாகவே சோடாவில் அதிக அமிலச்சத்து இருப்பது தான் அதற்கு காரணம். இரவு நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவது உடல் பருமனை அதிகரித்துவிடும். சாக்லேட்டில் அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. சீஸ் அதிகப்படியான கொழுப்பு கொண்டது. இரவு நேரத்தில் இதனை சாப்பிடுவது உடல் எடையைக் கூட்டும். எனவே இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லதல்ல.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!