பல நோய்களை வீட்டிலேயே அற்புதமாக குணப்படுத்தும் மிளகு..!

முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி மிளகில் இயற்கையாக அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரே ஒரு மிளகு போதும். நீங்கள் உண்ணும் உணவு சுவையாக. இரண்டு மிளகை எடுத்து இரண்டொரு ஆடாதொடை இலையை சேர்த்தால் இருமல் சளி காணாமல் போகும். மூன்று மிளகை எடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம் கூட முசு முசு என்று வளரும். நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சு வலி இல்லாமல் போகும். 5 மிளகு சுக்கு திப்பிலி இணைந்தால் கோழை ஓடியே போகும். ஆறு மிளகை எடுத்து பெருஞ்சீரகம் இடித்து சாப்பிட்டால் மூல நோய் வந்த இடம் இன்றி தானே மறையும்.

ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும், புண்ணும் தொண்டை கட்டும் விட்டுப் போகும். 8 மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் வாந்தி கூட எட்டி நிற்கும். 9 மிளகும் துளசியும், ஒவ்வாமை அலர்ஜி துரத்தி அடிக்கும். ஆறு ஏழு மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம். இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் மிளகை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!