கால்களில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை அகற்றனுமா? இதை செய்யுங்க..!

சாதரணமாக உடலின் மேல் பாகங்களை அழகுப்படுத்துவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஆனால் கால்களை நாம் கண்டுக்கொள்வதில்லை. இதனால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை போன்றவை ஏற்பட்டு நமது கால்களில் அழகையே மாற்றிவிடுகின்றது.

இதனை போக்க அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு கூட எளியமுறையில் போக்க வேண்டும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

முதலில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து 6 தேக்கரண்டி தண்ணீரில் கலந்துக் கொள்ளவும். இது ஆப்பிள் வினிகரை நீர்த்து போக செய்ய உதவும்.ஒரு சிறிய காட்டன் துணியை பயன்படுத்தி அதில் வினிகரை தொட்டு உங்கள் கால்களில் உள்ள அனைத்து புள்ளிகள் மற்றும் வடுக்களில் இதை தடவவும். இந்த செயல்முறையை தினமும் மேற்கொள்ளவும். அதற்கு பிறகு தோலுக்கு ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்துங்கள்.

2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள் இரண்டையும் நன்றாக கலக்கி பிறகு அவற்றை உங்கள் கால்களில் வடு உள்ள இடங்களில் மெதுவாக தேய்க்கவும். இதை மென்மையாக செய்யவும். பிறகு கால்களை சாதரண நீரில் கழுவவும். ஒவ்வொரு நாளும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் குறைவான அளவில் முள்ளங்கியை அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் கால் கப் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து வைக்கவும். இந்த கலவை ஒரு இரண்டு வாரங்கள் அப்படியே இருக்கட்டும். அந்த கலவையை எப்போதாவது குலுக்கி மட்டும் வைக்கவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த கலவையை வடிக்கட்டி கரைசலை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். உடலில் உள்ள புள்ளிகளின் மேல் ஒவ்வொரு நாளும் இந்த கலவையை தடவவும்.

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் எலுமிச்சையின் சாற்றை பிழிந்துக் கொள்ளவும். ஒரு பருத்தி துணியை பந்து போல ஆக்கி கொள்ளவும். அதை கொண்டு எலுமிச்சை சாற்றை உடலில் கருமையான இடங்கள் மற்றும் வடுக்கள் உள்ள பகுதிகளில் எலுமிச்சை சாற்றை தேய்க்கவும். இதை கொண்டு காலின் கருமையான இடங்கள் மற்றும் வடுக்களை சரி செய்ய முடியும்.

முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவ வேண்டும். பிறகு அதை அரைத்து பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டரை சேர்க்கவும். இப்போது இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்கவும். பின்னர் சாதாரண நீரில் அவற்றை கழுவவும். இவை கருமையான இடங்கள் மற்றும் வடுக்களை சரி செய்கின்றது.- source: daily.tamilnadu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!