காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால்…அப்பறம் தெரியும் பாருங்க

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம்.

எண்ணெயில் பல வகை உண்டு. அதில் மிகவும் ஆரோக்கியமான சுவையான எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த நல்லெண்ணெயில் வைட்டமின் டி, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், சல்பேட், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் போது பல நன்மைகளை நமக்கு தருகின்றது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், அஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
நல்லெண்ணையை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணையைஎடுத்துக் கொள்வதன் மூலம் பெரும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணைய்யை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல்

நல்லெண்ணையை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கெட்ட கொழுப்பு

நல்லெண்ணையில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில்
உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து (LDL), நல்ல கொழுப்பின்(HDL) அளவை அதிகரிக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணையை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

இரத்த அழுத்தம்

நல்லெண்ணையைய்யில் ஆன்டி-அக்சிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

மூட்டுவலிகள்

மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெய்யை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

பல் பிரச்சனைகள்

நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெய்யை தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி. 10 நிமிடம் கொப்பளித்து, வரவேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!