எடை இழப்பிற்கு தேனை பயன்படுத்துவதற்கான 7 வழிகள்..!

பண்டைய காலங்களில் இருந்தே தேன் ஒரு மருந்தாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக இது ஒரு சிறந்த எடை இழப்பு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தேன் நமது உடலில் சக்கரையின் அளவை சமப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.

அதுமட்டுமின்றி இதில் நிறைந்துள்ள பல்வேறு தாதுக்கள், உடல் எடையை குறைத்து, இருதயத்தில் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

அந்தவகையில் எடை இழக்க தேனை பயன்படுத்துவதற்கான 7 வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

எடையை குறைக்க சிறந்த வழி உங்கள் சமையலில் இந்த தேனை சேர்த்துக் கொள்வது தான். நீங்கள் வறுத்தெடுத்த உணவுகளிலும் இந்த தேனை சேர்க்கும்போது அது எடை இழப்புக்கு உதவுகிறது.
தேனை இரவு உணவில் முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். சப்பாத்தி அல்லது சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் தேனை பயன்படுத்துங்கள். இதிலுள்ள குறைந்த கலோரி ஒரு ஆரோக்கியமான இரவு உணவை நமக்குத் தருகிறது. மேலும் இது போன்ற மிதமான உணவுகள் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

ஒரு டம்ளர் சூடான பாலில் தேன் சேர்த்து அருந்தும்போது அது விரைவாக எடை இழக்க உதவுகிறது. காய்ச்சிய பாலில் கலோரிகள் அதிகம் இல்லை என்பதாலும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தான் பெரும்பாலும் உடற்பயிற்சி நிபுணர்கள் உடற்பயிற்சிக்கு முன் பாலில் தேன் சேர்த்து குடிக்க அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தும் போது அது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.

நாம் காலையில் தினசரி அருந்தும் தேநீரில் 2 அல்லது 3 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்த அது எடையை குறைக்க உதவுகிறது. இந்த பானத்தை நீங்கள் தினசரி இருமுறை குடிக்கலாம்.

தினசரி உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொள்ளவும். ஓட்ஸ் உடன் இந்த தேனை சேர்த்து நீங்கள் சாப்பிடும் போது அது உங்கள் உடல் எடையை இழக்க பெரிதும் உதவுகிறது.

சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் லவங்கப்பட்டை மசாலாத்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். நாம் உண்ணக்கூடிய காய்கறி அல்லது பல சான்ட்வெஜ்களில் இதை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இது எடை இழப்புக்கு நமக்கு உதவுகிறது.

குறிப்பு

உங்களுக்கு எலுமிச்சை அல்லது தேனில் உள்ள அமிலத்தன்மை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றால், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை கலந்து ஆலோசித்த பிறகு இதை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.- source: daily.tamilnadu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!