சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் செய்ய நிறம் மாறும் அர்ச்சனைப் பூக்கள்..!

குமரி மாவட்டம் குலசேகரத்தில் சீரடி சாய்பாபா பஜனை மண்டலின் சார்பில் குலசேகரம் எஸ்ஆர்கேபிபி பள்ளி வளாகத்தில் சாய்பாபா சிலைக்கு பக்தர்கள் புஷ்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டு பிரார்த்தனை, மானசீக பிரார்த்தனை உள்ளிட்ட வழிபாடுகளும் நடந்தன.

பின்னர் சாய்பாபா சிலை பள்ளி அருகாமையில் உள்ள கிருஷ்ணா கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு தினமும் சாய்பாபாவுக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சாய்பாபாவுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்படும் மலர்கள் சிறிது நேரத்தில் நிறம் மாறுவதாக செய்தி பரவியது.

இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் கோயிலில் குவியத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாய்பாபா சிலைக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்படும் சிவப்பு நிற ரோஜா பூக்கள் சிறிது நேரத்தில் ஆரஞ்சு, இளம்சிவப்பு உள்பட பல வண்ணங்களில் மாறுகின்றன. சில பக்தர்களுக்கு பூக்களை கூர்ந்து கவனிக்கும் போது அதில் சாய்பாபா உருவம் தெரிவதாக கூறினர். இதனால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தனர். இது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!