வாதம், மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை..!

உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.


மூட்டழற்சியை சந்துவாதம், மூட்டுவாதம் என்றும் அழைப்பர். உயிர் தாதுக்கள் மூன்று நாடிகளை உருவாக்குகிறது. அவை வாதம், பித்தம், கபம். இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். இந்த வாதத்தின் தன்மை மேலிட்டால் மலக்கட்டு ஏற்படுகிறது. பேதியானால் வாதம் குறைகிறது.

உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.

வாத நோய், நரம்பு நோய் சிகிச்சையில் இந்த கீரை பயன்படுவதாக சமஸ்கிருத எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கீரையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து கூழ்ம நிலையில், தேய்த்துவந்தால் வலி, வீக்கம், மற்றும் பல்வேறு கட்டிகள் குறைகின்றன.

கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன்மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

இதன் சிறப்பு குணம், நமது மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து, சிறுநீராக வெளியேற்றுகிறது.

தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.

முடக்கற்றான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

முடக்கற்றான் காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.


சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை சூப்

முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!