உடல் சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ்.!

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று தர்பூசணி, சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 150 கிராம்,

சப்ஜா விதை – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
தேன் – தேவைக்கு,
புதினா இலை – சிறிது.

செய்முறை :

தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!