மாம்பழம் சாப்பிட்டு கொட்டையை தூக்கி போடாதீங்க..அவ்வளவு நன்மை இருக்கு!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் மாம்பழ விதையின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

மாம்பழத்தை நாம் பழங்களின் ராஜா என்று அழைப்பது வழக்கம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதன்படி மாம்பழத்தின் விதைகளிலும் ஊட்டச் சத்து அதிகம் உள்ளது. அதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. மாங்காய் விதையில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. மேலும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளது.

இந்த மாங்காய் கொட்டையில் பயோ ஆக்டிவ், பினோலிக் நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் அதிகம் உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு குறைக்கக்கூடிய பண்புகளை கொண்டது. இந்த மாங்காய் விதையிலிருந்து எடுக்கப்படும் சாற்றினை உட்கொள்வதை நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நன்மை தரும். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இதய நோய்க்கு சிறந்தது. இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீழ்வாதம், செரிமான அமைப்பு மற்றும் பிற நீடித்த நோய்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு இந்த மாங்காய் விதைகள் பெரிதும் உதவுகின்றன. இதிலுள்ள குளுக்கோஸ் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. மாங்காய் விதையில் இருந்து எடுக்கப்படும் சாற்றினை உட்கொள்வது உடல் எடையை குறைக்க வழி செய்யும். வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்களுக்கு மாங்காய் விலை சாறு கொடுப்பது வழக்கம்.

இந்த மாங்காய் விபச்சாரிகளை உட்கொள்ளும் போது மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். இது சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தும், வயது முதிர்வை தடுக்கும்,முகப்பருவினால் ஏற்படும் வடுக்கள் மற்றும் சுருக்கங்களை குறைப்பதற்கும் உதவுகிறது. இந்த மாங்காய் இலையை பொடியாக செய்து முகத்திற்கு பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, தலை பொடுகு மற்றும் ஆரம்பகால நரைத்தல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மாம்பழ விதைகள் பொதுவாக மாத்திரைகள், எண்ணெய் அல்லது தூள் வடிவில் உட்கொள்ளப்படுகின்றன.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!