வாத்து முட்டையில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள்!

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாருக்கும் தெரியும். முட்டையில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். உலகளவில் கோழி முட்டைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் வாத்து முட்டைகள் அதிகப் புகழ்பெற்று உள்ளது.

இதனால் மக்கள் வாத்து முட்டைகளை வாங்க தொடங்கி உள்ளனர். கோழி மற்றும் வாத்து முட்டைகள் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் ஒன்று போல் தான் இருக்கும். ஒரு வாத்து முட்டையை சாப்பிடுவது 11/2 கோழி முட்டை அல்லது 2 கோழி முட்டையை சாப்பிடுவதற்கு சமமாகும்.

இந்த வாத்து முட்டையை எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

வாத்து முட்டைகளில் காணப்படும் புரதங்களின் பன்முகத்தன்மை வாத்து முட்டைகளை நுரைத்தல், கூழ்மமாக்கும் பண்புகளுக்கு காரணமாகின்றன.


ஓவல்புமின் என்பது வாத்து முட்டைகளில் உள்ள ஒரு புரதம் இது உணவு சேர்க்கைகளில் அதிக தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இவை தான் வாத்து முட்டைக்கு க்ரீமி தன்மையை கொடுக்கிறது.


வாத்து முட்டையில் கோழி முட்டையை விட அதிகளவு மஞ்சள் கருவானது காணப்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒப்பிடும்போது முட்டையின் மஞ்சள் கருவில் அதிக வைட்டமின் பி 12 இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.


வாத்து முட்டையின் மஞ்சள் கரு பெரியதாக இருப்பதால், கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டைகளில் வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கும்.


மஞ்சள் கருக்கள் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் அடர்த்தியான மூலமாகும்.
வாத்து முட்டைகளில் கோழி முட்டைகளை விட பெரிய மஞ்சள் கரு உள்ளது, இதனால் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். வாத்து முட்டைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இது இதயத்திற்கு சிறந்தது.


இது தினசரி கொழுப்பு அமில தேவைகளை பூர்த்தி செய்கிறது.
சிலருக்கு கோழி முட்டைகளில் ஒவ்வாமை இருக்கும். எனவே கோழி முட்டைகளில் ஒவ்வாமை இருப்பவர்கள் வாத்து முட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.


வாத்து முட்டை மற்றும் கோழி முட்டைகளில் காணப்படும் முக்கிய உணவு ஒவ்வாமை புரதம் ஓவொமுகோயிட் ஆகும். எனவே வாத்து முட்டைகளை நீங்கள் சிறந்த மாற்றாக தேர்ந்தெடுக்கலாம்.
வாத்து முட்டைகளில் உள்ள ஓவல்புமின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் புரதம் ஆகும். ஒரு ஆய்வின்படி, கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது 15 நாட்கள் வைத்திருக்கும் வாத்து முட்டைகளின் புரத வகைகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே வாத்து முட்டைகளை நீண்ட நாட்கள் வைத்து இருந்தாலும் கெடாமல் இருக்கும்.- source: tamil.express * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!