தப்பித் தவறிக்கூட அதிகமா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க. சிறுநீரகத்தில் கல் உருவாகும்!

இந்த உணவுகளை எல்லாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு குடிக்காதது தான்.

சிறுநீரகத்தில் சேரக்கூடிய அதிகப்படியான கனிமச்சத்துக்களும் உப்பும் கற்களாக மாறி விடும். சிறுநீரக கற்கள் உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். அது மட்டுமல்லாமல் சில உணவுகள் கூட சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். அவ்வாறு சிறுநீரக கற்களை எந்தெந்த உணவுகள் ஏற்படுத்துகின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மாட்டிறைச்சியில் புரோட்டீன் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது. யூரிக் அமிலம் அதிகம் இருக்கின்ற பொருட்களை சாப்பிடும் போது சிறுநீரக கற்கள் உருவாகும்.

சோடா மற்றும் எனர்ஜி பானங்கள் அடிக்கடி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் அதிக அளவில் உருவாகும். சோடாக்களை சிறுநீரக கற்களை உருவாக்கும் பாஸ்பாரிக் அமிலம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பானங்களை குடிப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள வெள்ளை சாதம், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதர உணவு பொருட்கள் இன்சுலின் அளவை அதிகரித்து, சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

மேலும் செயற்கை இனிப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும். உப்பில் சோடியம் அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க உணவில் உப்பை அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!